வாணியம்பாடியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் பறிமுதல் செய்த 2000 மதுபாட்டில்கள் அழிப்பு!

 
liquor

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் மதுபாடில்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், சட்ட விரோதமாக மது விற்பனையை தடுக்கும் பொருட்டு தொடர் சோதனை நடத்தி, முறைகேடாக விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 38 வழக்குகளில் சுமார் 525 வெளி மாநில மதுபாட்டில்கள் உள்பட 2 ஆயிரத்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது. இவை வாணியம்பாடியில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தன. 

liquor

இதுகுறித்த வழக்குகள் நிறைவடைந்த நிலையில், மதுபாட்டில்களை அழிக்குமாறு திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன் பேரில், வாணியம்பாடி அருகே உள்ள லாலா ஏரி பகுதியில் உள்ள பள்ளத்திற்கு மதுபாட்டில்கள் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் முன்னிலையில் மதுபாடில்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டன.