பென்னாகரம் வாக்குச்சாவடியில், தருமபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆய்வு!

 
election

தருமபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றும் வரும் நிலையில், பென்னாகரம் அரசுப்பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் ஆட்சியர் திவ்யதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகளுக்கும், 10 பேரூராட்களில் உள்ள 159 வார்டுகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாலக்கோடு பேரூராட்சியில் இருவர் போட்டியின்றி தேர்வான நிலையில், மொத்தம் 190 வார்டுகளுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

election

இதில் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் என மொத்தம் 801 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான திவ்யதர்ஷினி, இன்று காலை முதல் பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட முள்ளுவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளில்  நடைபெறும் வாக்குப்பதிவை நேரில் பார்வையிட்டு ஆவ்யு செய்தார்.