திண்டுக்கல் மாவட்ட கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
dindigul

திண்டுக்கல் மாவட்ட கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நல வாரிய அலுவல்சாரா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கைம்பெண் (ம) ஆதரவற்ற மகளிர் நல வாரியம் தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல் இவ்வாரியத்தின் சீரிய நோக்கமாகும்.

dindigul

கைம்பெண்கள் (ம) ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் போன்ற நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்காணும் தகுதி வாய்ந்த நபர்கள் 31.10.2022-க்குள் விண்ணப்பிக்கலாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிது. மேலும், தகவலுக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், அணை எண்.88. மாவட்ட ஆட்சியர் வளாகம்,  திண்டுக்கல் மாவட்டம் என்ற முகவரி மற்றும் 0451 2460092 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.