திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 24-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
dindigul dindigul

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக்கூடத்தில் வரும் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத் துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர்.

paddy farm

இந்த கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு  மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டு தீர்வு காணலாம். மேலும், கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைத்து நபர்களும் தவறாது முகக்கவசம் அணிந்துகொள்ளவும், தனிநபர் இடைவெளியும் கண்டிப்பாக கடைபிக்க வேண்டும் என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.