திருப்பூர் மாநகராட்சி மேயராக தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வாகினார்!

 
tirupur

திருப்பூர் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த தினேஷ்குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களில் வென்றது. இதனை அடுத்து, திமுக சார்பில் வடக்கு மாநகர பொறுப்பாளரும், 49-வது வார்டில் வெற்றி பெற்றவருமான தினேஷ்குமார், மேயர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.

tirupur

இதனை அடுத்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி, மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடியிடம், தினேஷ்குமார் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், தினேஷ்குமார் மாநகராட்சி மேயராக அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து, மேயராக தேர்வான தினேஷ்குமாருக்கு, திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர். பாலசுப்பிரமணியம் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.