தனியார் பள்ளி வாகனத்தில் திடீரென கழன்று ஓடிய சக்கரம்... 10-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு லேசான காயம்!

 
dharapuram

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் பள்ளி பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஒடிய சம்பவத்தில், 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் லேசான காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விவேகா தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி சாலையில் உள்ள பொண்ணாபுரம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பள்ளி பேருந்தின் டயர் கழன்று ஓடியது. இதனால் பேருந்து நிலை தடுமாறியதில், அதில் இருந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அருகில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

bus

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் முறையாக ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்கிய பின்னரே அவற்றை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.