தருமபுரியில் வரும் 27ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
dharmapuri dharmapuri

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.01.2023 வெள்ளிக்கிழைமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

paddy farm

எனவே தருமபுரி மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துக்களையும் எடுத்துக்கூறி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.