ஈர்ப்பை ஏற்படுத்திய முதல்வரின் திட்டம்... திமுக-விற்காக தீவிரமாக வாக்குசேகரிக்கும் வெளிநாட்டு பயணி!

 
cbe dmk

கோவையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வெளிநாட்டு நபர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவருது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், கோவையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவை சிங்காநல்லூர் பகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருவது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

cbe dmk

ஐரோப்பிய நாடானா ருமேனியாவை சேர்ந்தவர் ஸ்டீபன். தொழில்முறை பயணமாக கோவைக்கு வந்திருந்த இவர், அரசுப்பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, அந்த பேருந்தில் பெண்கள் யாரும் டிக்கெட் எடுக்காததை கண்டு ஆச்சரியமடைந்த ஸ்டீபன்,  இதுகுறித்து தனது நண்பரான மருத்துவர் கோகுல் என்பரிடம் விசாரித்துள்ளார். அப்போது, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை என்ற தமிழக அரசின் அறிவிப்பு குறித்து தெரிந்து கொண்ட ஸ்டீபன், இந்த திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். 

மேலும், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முதல்வர் ஸ்டானுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடவும், வாக்காளர்களிடம் வாக்குசேகரிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, மருத்துவர் கோகுல் உதவியுடன், அவரது கட்சி நண்கள், திமுக தொண்டர்களுடன் சேர்ந்து ஸ்டீபன் திமுக கொடியுடன் இருசக்கர வாகனத்திலும், பேருந்திலும் ஏறி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

cbe dmk

திமுக கொடியுடனும், பதாகையுடனும் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஸ்டீபன், வளர்ந்த நாடுகளிலேயே பெண்களுக்கு இலவச கட்டணம் இல்லை என்றும், எனவே முதல்வர் ஸ்டானின் திட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாகவும் கூறினார். மேலும், தனது நாட்டில் தேர்தல் நடந்தபோது தான் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என கூறிய ஸ்டீபன், கோவையில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாகவும் கூறினார்.