அரியலூரில் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

 
collector ariyalur

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.   

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) அறிவிக்கப்பட்டு உள்ள குரூப் - 2 பணியிடங்களுக்கான முதன்மை தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் 30.11.2022 முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள குரூப் - 2 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல், முதல் நிலை தேர்விற்கான நுழைவுச்சீட்டு மற்றும் சுய விபரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC

மேலும், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக youtube channel - https://www.youtube.com/watch?v=l9TmcwwjiD8 மற்றும் மெய்நிகர்கற்றல் இணையதளம் - https://tamilnaducareerservices.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது. இதில் TNPSC,TNUSRB,IBPS,SSC,RRB & UPSC போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடகுறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் ஆகின இடம்பெற்றுள்ளன.

மேலும், கல்வித்தொலைக்காட்சி வாயிலாக போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பப்படுகிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த குரூப் - 2 முதன்மை தேர்வினை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.