தேனியில் மத்திய அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

 
theni collector

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (10+12) நிலையிலான தேர்வு அறிவிப்பு டிச.6 அன்று வெளியிடப்பட்டு உள்ளது. இத்தேர்வு அறிவிப்பின்படி 4500 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 4ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. தேர்ந்த வல்லுனர்களை கொண்டு தேர்வுக்கான பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.

45,000 பணியிடங்கள்..  SSC  வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..

12ஆம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான கல்வித்தகுதி உடைய மனுதாரர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 27 வரை. ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வயது தளர்வு உண்டு. எனவே விருப்பமுள்ள மனுதாரர்கள் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் வரும் ஜனவரி 4ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

அவ்வாறு தேர்வுக்கு விண்ணப்பம் செய்த மனுதாரர்கள தேனி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 6379268661 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு, ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளர்.