சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு தினம் - பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை!

 
pollan

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவ படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர். 

ஈரோட்டில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் நினைவு நாள் நிகழ்ச்சி, தமிழக அரசின் சார்பில் நேற்று மொடக்குறிச்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.  இதில் வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் கலந்துகொண்டு, பொல்லானின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.   தொடர்ந்து மாவீரன் பொல்லான் பேரவையின் தலைவர் வடிவேல்ராமன் தலைமையில் கட்சி நிர்வாகிகளும், பொல்லானின் வாரிசுதாரர்கள் நடராஜன், சுப்பிரமணி மற்றும் நல்லமங்காபாளையம் கிராம மக்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

pollan

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ.க்கள் பாலகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, முன்னாள் எம்பி.செல்வக்குமார சின்னையன், மொடக்குறிச்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சண்முகம், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொதுச்செயலாளர் விடியல் சேகர், பேட்டை சுரேஷ் ஆகியோர் மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் கட்சி மாநில மகளிரணி செயலாளர் சிதாலட்சுமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ், பாஜ. சார்பில் பட்டியல் அணி பொதுச்செயலாளர் விநாயமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைமை நிலைய செயலாளர் பாவரசு தலைமையில் மாநில துணைப் பொதுச்செயலாளர் கனியமுதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

poa

தமிழ் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, அகில இந்திய மக்கள் கட்சி, அருந்ததியர் விடுதலை முன்னனி, தமிழ்நாடு அருந்ததியர் முன்னனி, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை, தமிழ்நாடு அருந்ததியர் சங்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, குறிஞ்சியார் மக்கள் கூட்டமைப்பு, சமூக விடுதலை, பகுஜன் ஜமாஜ் கட்சி, தலித் விடுதலை கட்சி, தலித் விடுதலை இயக்கம், வீரத்தாய் குயிலி வாரிசுதாரர்கள் முத்தையா, தாரங்கி, கணேசன், ஒண்டி வீரன் வாரிசுதாரர்கள் ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொல்லானின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய வடிவேல்ராமன், மாவீரன் பொல்லான் நினைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி பங்கேற்காததற்கு கண்டனம்  தெரிவித்தார்.