"காஞ்சிபுரத்தில் உரிய அனுமதிபெற்று விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும்" - எஸ்.பி. சுதாகர் அறிவுறுத்தல்!

 
kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஆட்சியர், காவல்துறை உள்ளிட்டோரிடம் உரிய முன்அனுமதி பெற்று, விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும் என எஸ்பி சுதாகர் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய நபர்கள், மத அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

kanchipuram

இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்பி சுதாகர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை நிறுவுதல், வழிபடுதல் மற்றும் கரைத்தல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், மாவட்ட ஆட்சியர், காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் மின்சார துறை ஆகிய துறைகளிடம் உரிய முன் அனுமதி பெற்று, விநாயகர்  சிலைகளை நிறுவ வேண்டும் எனவும் எஸ்பி சுதாகர் கேட்டுக் கொண்டார்.