கோபி அருகே அரசுக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

கோபிச்செட்டிபாளையம் அருகே தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் வேதனையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அடுத்த வரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். விவசாயி. இவரது மனைவி தவமணி. இவர்களுக்கு தட்சின், கோதைநாயகி என்கிற விவிதா (20) என 2 பிள்ளைகள் உள்ளனர். கோதைநாயகி, கோபி அரசு கல்லூரியில் பி.காம் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி பச்சையப்பன் படுகாயமடைந்தார். அவரை கோதைநாயகி உடனிருந்து கவனித்து வந்தார். மேலும், அவரது நிலையை எண்ணி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். அத்துடன், அவருக்கு அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டு வந்துள்ளது.

gobi

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை தவமணி, மகன் தட்சன் ஆகியோர் தோட்டத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, வீட்டிலிருந்த கோதைநாயகி குளியல் அறையில் உட்புறமாக பூட்டிக்கொண்டு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் வீட்டிற்கு வந்த தவமணி, தட்சன் ஆகியோர் குளியல் அறையில் தண்ணீர் வெளிறும் சத்தம் கேட்டு கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக கதவு திறக்காததல் சந்தேகமடைந்த தட்சன் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, கோதைநாயகி தூக்கிட்ட நிலையில் தொங்கினார். 

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், கோதைநாயகி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவம் குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தந்தைக்கு ஏற்பட்ட விபத்து மற்றும் வயிற்றுவலி காரணமாக கோதைநாயகி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.