அரவைக்கு பதிவு செய்த கரும்பை தனியார் ஆலைக்கு கொண்டுசென்றால் நடவடிக்கை - அரியலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

 
collector ariyalur

சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவுசெய்த அரியலூர் மாவட்ட கரும்பு விவசாயிகள், தங்களது கரும்பினை இடைத்தரகர் மூலம் தனியார் ஆலைகளுக்கு கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரித்துள்ளார்

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சேத்தியாதோப்பில் செயல்பட்டு வரும் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் விவகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2022 - 2023 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு பதிவு செய்த அரியலூர் மாவட்டத்தினை சேர்ந்த கரும்பு விவசாயிகள் தங்களது கரும்பினை தனியார் ஆலைகளுக்கு சிறப்பு அரவைப் பருவத்திற்கு (Special Season) கொண்டு செல்வது , தமிழ்நாடு கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1996-ன்படி சட்ட விரோத செயலாகும். 

sugarcane

எனவே இடைத்தரகர்கள் மூலம் பிற ஆலைகளுக்கு கரும்பு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், கரும்புகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பதிவேடுகளை (Cutting Order and Trip Sheet) வருவாய் மற்றும் காவல் துறையினரை கொண்டு ஆய்வு செய்து சட்ட விரோதமாக செயல்படும் இடைத்தரகர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.