கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாக்குதல் சம்பவம்... கோவையில் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்கின!

 
cbe private schools

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளி கூட்டமைப்பு இன்று விடுமுறை அறிவித்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் இறப்புக்கு நீதி கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். அப்போது, தனியார் பள்ளி வாகனங்களை தீவைத்து எரித்ததுடன் வகுப்பறைகளை உடைத்து சேதப்படுத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் உள்ள தனியார் பள்ளிகள் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து, தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவித்தது. எனினும் மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் அனுமதியின்றி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என அறிவித்தது.

private school

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின. அதே சமயம் பீளமேடு பகுதியில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளி, புலியகுளத்தில் உள்ள வித்யா நிகேதன் பள்ளி, காந்திபுரம் பகுதியில் உள்ள சுகுணா இண்டர்நேஷனல் பள்ளி, கோவை பப்ளிக் பள்ளி உள்ளிட்ட ஒரு சில பள்ளிகள் மட்டும் மூடப்பட்டுள்ளன.