நாமக்கல்லில் நவ.22-ல் வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

 
collector namakkal collector namakkal

நாமக்கல்லில் வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக, படித்து  வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு நாமக்கல் வட்டாரத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் 22.11.2022 செவ்வாய்க்கிழமை அன்று நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில், நாமக்கல் வட்டாரத்தை சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தேர்வு செய்து, வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 

namakkal

மேலும், வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்புகிற நிறுவனங்கள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், கூடுதல் கட்டிடம், நாமக்கல் மாவட்டம் அலுவலக தொலைபேசி எண். 04286 - 281131-க்கு தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை 18.11.2022 அன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

எனவே நாமக்கல் வட்டாரத்தை சேர்ந்த வேலையில்லா (ஆண் - பெண் இருபாலரும்) இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.