திருவண்ணாமலை மாவட்டத்தில் லோக் அதாலத்... 354 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது!

 
tvmalai

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில் 354 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2.63 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி விஜயா தலைமையில் மக்கள் நீதி மன்றம் எனப்படும் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி எல்.கே.ஜமுனா, வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எ.தாவூதாம்மாள், மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.டி.சதீஷ்குமார், நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

judgement

இதில் மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்குகள் என பல்வேறு பிரிவுகளை சார்ந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த லோக் அதாலத்தில் 354 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.2 கோடியே 63 லட்சத்து 43 ஆயிரத்து 35 இழ்ப்பீடாக வசூலிக்கப்பட்டது. இதில் அரசு வழக்கறிஞர்கள் கே.ஆர்.ராஜன், ராஜமூர்த்தி, வழக்கறிஞர் சங்க தலைவர் எஸ்.ஸ்ரீதர், செயலாளர் பாலாஜி, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.