பெருந்துறை மாரத்தான் போட்டிக்கான சீருடையை அறிமுகம் செய்த எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார்!

 
peru

பெருந்துறையில் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள மாரத்தான் போட்டிக்கான சீருடையை, அதிமுக எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் அறிமுகம் செய்து, பந்தய பாதையை ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வரும் 25ஆம் தேதி பல்வேறு அமைப்புகள் சார்பில் பெருந்துறை மாரத்தான் என்ற பெயரில் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, ஜி.ஹெச் ரவுண்டானா, தோப்புப்பாளையம், சென்னிய வலசு, ஈரோடு சாலை, குன்னத்தூர் சாலை செல்லாண்டியம்மன் கோயில் வழியாக மீண்டும் புதிய பேருந்து நிலையம் வந்தடையுமாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

perundurai

இதில் பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ் ஜெயக்குமார் கலந்து கொண்டு, நிர்வாகிகள் முன்னிலையில் வெள்ளை நிறத்திலான சீருடையை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து, போட்டி நடைபெற உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் எம்எல்ஏஜெயக்குமார் நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது, ஓட்டப்பந்தய பாதையில் ஓடிவரும் வீரர்களுக்கு தண்ணீர் வசதி, இடையூறு இல்லாத வாகனப் போக்குவரத்து, வீரர்களின் பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ வசதி உள்ளவற்றை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.  

இந்த ஆய்வின்போது, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி கே செல்வராஜ், விஜயன் என்கிற ராமசாமி, ராம்ஸ் என்கிற ராமசாமி, மகளிரணி மோகனாம்பாள், யசோதரன், கருப்பட்டி சமேளனம் ராஜேந்திரன், ரவிக்குமார், பிரபாகரன், மோகன், ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.