பெருந்துறை அரசுப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை தொடங்கிவைத்த எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார்!

 
Smartclass

ஈரோடு மாவட்டம் துத்திப்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை, பெருந்துறை எம்எல்ஏ ஜெயகுமார் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொதிக்குட்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 55 தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட துடுப்பதி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை பெருந்துறை தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழு உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

smartclass

இந்த நிகழ்ச்சிக்கு துடுப்பதி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அன்பரசு முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் விஜயன் என்கிற ராமசாமி, அருள்ஜோதி கே செல்வராஜ், மாவட்ட பொருளாளர் கேபிஎஸ் மணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.