"கால்நடை பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு என வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரவல்" - விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை!

 
virudhunagar virudhunagar

விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு என வாட்ஸ்அபில் பரவும் தகவல் தவறானது என்றும், பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் எனவும் ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் 90  மணிநேர பயிற்சி அளித்து ரூ.15,000 /- முதல் ரூ.18,000 /- வரை சம்பளத்தில் கால்நடை உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பதவியில்  ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது எனவும், இதற்கான பணி நியமன ஆணை ஜுன் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் எனவும், ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறும், நான்காண்டுகளில் நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் மோசடி தகவல் வாட்ஸ்அப் சமூக ஊடகம் வழியாக பரவி வருகிறது.

Image

கால்நடை பராமரிப்பு துறைக்கு சம்பந்தமில்லாத தவறான இந்த தகவலை நம்பி பொதுமக்கள் யாரு ஏமாற வேண்டாம் என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.