தலைவாசல் அருகே கலவை இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பலி!

 
dead

சேலம் மாவட்டம் தலைவாசலில் கட்டுமான பணியின்போது கலவை இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே விருதாச்சலம் கூட்டுரோடு பகுதியில் தமிழக அரசு சார்பில் ரூ.1,022 கோடி மதிப்பில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கும் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், நேற்று இரவு ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்டாரா மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி சிரில் மோருமு (23) என்பவர் சிமெண்ட் கலவை இயந்திரம் அருகே பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். 

thalaivasal

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலைவாசல் காவல் நிலைய போலீசார், அவரை உடலை கைப்பற்றி ஆத்துர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்வம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கலவை இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.