75-வது சுதந்திர தினத்தையொட்டி, ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியா கிரக நடைபயணம்!

 
cong

ஈரோட்டில்  நாட்டின் 75-வது சுதந்திர தின பவள விழாவையொட்டி தியாகிகளை நினைவு கூறும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்தியாகிரக நடைபயணம் நடைபெற்றது.

நாட்டின் 75-வது சுதந்திர தின பவள விழா தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும், வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்ட நாளையொட்டியும் ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியா கிரக நடைபயணம் நடைபெற்றது. ஈரோடு காளிங்கராயன் பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த  நடைபயணத்திற்கு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திருசெல்வம், துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

congress

இதில் கிராம கமிட்டி தலைவர் கதிர்வேலு, முன்னாள் வட்டார தலைவர் அப்புச்சி என்கின்ற சுகுமார், இளைஞர் காங்கிரஸ் செந்தூர் ராஜகோபால், வழக்கறிஞர் பிரிவு தலைவர் வினோத் மாரியப்பா,வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன், மொடக்குறிச்சி வட்டாரம் செந்தில் ராஜா, மாவட்ட நிர்வாகிகளான டிட்டோ, லயன் இப்ராஹிம், ஐஎன்டியூசி என்.துரைசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  கவுந்தபாடி சாலையில் புறப்பட்ட நடைபயணம் ஈரோடு பவானி பிரதான சாலை வழியாக லட்சுமி நகர் பேருந்து நிறுத்தம் தேசிய நெடுஞ்சாலை அருகில்  நிறைவுற்றது. நடைபயணத்தின்போது, சுதந்திரம் பெற்றுக்கொடுத்த தியாகிகளை நிறைவு கூறி கோஷங்களை எழுப்பிய படி சென்றனர்.