மதுரையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு - இருவர் கைது!

 
mdu commissioner

மதுரை மேல அனுப்பானடியில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில்  இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக, மாநகர  காவல் ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை  மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் எம்.ஹெச். கிருஷ்ணன். ஆர்.எஸ்.எஸ். பிரமுகர். இவரது வீட்டில் கடந்த 24ஆம் தேதி மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனார். இந்த சம்பவம் குறித்து மதுரை கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக, மதுரை மாநகர காவல் ஆணையர் செந்திகுமார் தெரிவித்துள்ளார்.

mdu bomb

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் செந்தில்குமார், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் எம்.ஹெச். கிருஷ்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்ததாக தெரிவித்தார். போலீசாரின் விசாரணையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சம்மட்டிபுரத்தை சேர்ந்த உசேன், மேலப்பேட்டையை சேர்ந்த சம்சுதீன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்ததாகவும், இதனை அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் ஆணையர் செந்தில்குமார் தெரிவித்தார். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருவதாகவும் அவர் கூறினார். மேலும், கடந்த 22ஆம் தேதி மதுரை கோரிப்பாளையத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனையின்போது, உளவுப் பிரிவு காவலர் துரைமுருகன் தாக்கப்பட்ட சம்பவத்தில், மேலுரை சேர்ந்த ஷேக் அலாவுதீன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.