மதிப்பெண் குறைந்ததால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை... ஆத்தூர் அருகே சோகம்!

 
attur

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். லாரி ஒட்டுநர். இவரது மகள் காவியா(17). இவர் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்தார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் காவியா 600-க்கு, 370 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் காவியா, குறைந்த அளவே மதிப்பெண்கள் பெற்றதால் மனவேதனையுடன் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த காவியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Attur gh

வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த காவியாவின் தாய் பூங்கொடி மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்த ஆத்தூர் ஊரக போலீசார், காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.