திருப்பத்தூர் மாவட்டத்தில் பிப்.27-ல் 709 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்!

 
polio vaccine

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 709 முகாம்கள் மூலம் 5 வயதுக்குட்பட்ட 1.08 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட உள்ளதாக, ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 169, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 709 முகாம்கள் மூலம் 2275 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு வழங்கப்பட உள்ளது. மேலும், 5 நடமாடும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.பணிகளை 90 மேற்பார்வை குழுக்கள் மூலம் கண்காணிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

tirupattur

இதுதொடர்பான அனைத்து துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இதில்,  திருப்பத்தூர் துணை இயக்குநர் சுகாதார பணிகள், செந்தில், போலியோ இல்லாத உலகை உருவாக்க போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் ஆற்றவேண்டிய  பணிகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகளில் சிறப்பு சொட்டு மருந்து முகாம்கள் செயல்படும் என தெரிவித்தார். மேலும், ஆட்சியர் அவர்கள் பொதுமக்கள் நலன்கருதி கூட்டம் அதிகமாக கூடும் கோவில்களிலும், மலைமீதுள்ள குக்கிராமங்களிலும் சிறப்பு சொட்டு மருந்தக முகாம்கள்  தன்னார்வ இளைஞர்களை கொண்டு அமைக்கப்படும். இந்த முகாமின்போது, கோவிட் 19 விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஆட்சியர் அமர்குஷ்வாக தெரிவித்தார்.