நாமக்கல்லில் அக்.28-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

 
collector namakkal collector namakkal

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளிட்டு உள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாமானது வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டா, நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம்.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம்லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்டண்ட் போன்ற பணிகளுக்கு தேர்வுசெய்யப்ட்டுள்ளனர். 10ஆம் வகுப்பு தேர்ச்சி / தேர்ச்சி பெறாதவர், 12ஆம் வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் கணினியியல் முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வி தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

Namakkal employment office

மேலும், வேலைவாய்ப்பு உதவி தொகை திட்டத்திற்கான படிவம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும். இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இம்முகாமானது முற்றிலும் இலவசமானது. இந்த முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. 

மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் வரும் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள தனியார் துறை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.