சேலம் மாநகராட்சி மேயராக ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு

 
salem salem

சேலம் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேலம் மாநகராட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 47 வார்டுகளில் திமுகவும், காங்கிரஸ் 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்திலும் வென்றன. அதிமுக 7 வார்டுகளில் வென்றது. இதனை அடுத்து, நேற்று முன்தினம் மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து, மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று மாநகராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

சேலம்

இதில் மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமச்சந்திரன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனை அடுத்து, அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் அறிவித்தார். தொடர்ந்து, ராமச்சந்திரனுக்கு மாநகராட்சி ஆணையர் சான்றிதழ் வழங்கி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து, திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ராமச்சந்திரனுக்கு பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த பதவி ஏற்பு விழாவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. துணை மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.