ரம்ஜான் பண்டிகை - கோவையில் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

 
cbe

ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர்.

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் அதிகாலை முதலே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக, கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய  பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

cbe

இதேபோல், கோவையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் உக்கடம் பகுதியில் உள்ள ரோஸ் கார்டன் நண்பர்கள் பொதுநல சங்கம் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

cbe

இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிவாசல்களில் காலை 9 மணியளவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது, கொரோனா பெருந்தொற்று உலகை விட்டு அகலவும், உலக மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் வாழவும் வேண்டி பிரார்ததனையில் ஈடுபட்டனர்.