ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பாடு தாமதம்!

 
train  train

ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் இன்று இரவு 9 மணிக்கு பதிலாக, இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி, நடைமேடை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் (22621) இன்று இரவு 11.30 மணிக்கு 2.30 மணி நேரம் காலதாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.