ஈரோடு மாவட்டத்தில் காணாமல் போன ரூ.8.16 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு!

 
erode

ஈரோடு மாவட்டத்தில் திருட்டு போன ரூ.8.16 லட்சம் மதிப்பிலான செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் திருட்டு மற்றும் மாயமானது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். இந்த நிலையில், போலீசாரின் தீவிர நடவடிக்கையின் காரணமாக ரூ.8 லட்சத்து 16ஆயிரத்து 996 மதிப்பிலான 55 செல்போன்கள் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

erode

இதில் மாவட்ட எஸ்பி சசிமோகன் கலந்துகொண்டு, செல்போன்களை அவற்றின்  உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். நடப்பு ஆண்டில் இதுவரை திருட்டு மற்றும் காணாமல் போன ரூ.77 லடசத்து 86 ஆயிரம் மதிப்பிலான 528 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.