"கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ.12 உயர்த்தி வழங்க வேண்டும்"... கறிக்கோழி பண்ணை விவசாயிகள் வலியுறுத்தல்!

 
erode

கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ.12 உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச்சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 

ஈரோட்டில் தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச்சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரபீக், பொருளாளர் இருங்கோவேள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. லதா, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கறிக்கோழி பண்ணையாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

poultry

இந்த கூட்டத்தில், முத்தரப்பு பேச்சுவார்த்தை முடிவின் அடிப்படையில் கறிக்கோழி வளர்ப்புக்கு ஒரு கிலோவுக்கு ரூ.12 உயர்த்தி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்கள் அளித்த பொய் புகாரின் அடிப்படையில், பண்ணையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.