தருமபுரி அருகே போதைக்காக பதுக்கிவைத்த ரூ.20 லட்சம் வலி நிவாரணி மருந்துகள் பறிமுதல் - 4 பேர் கைது!

 
drug

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே போதைக்காக வலி நிவாரணி மருந்துகளை பதுக்கி விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு போதை பழக்கத்துக்காக, வலி நிவாரணி மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய கிடைத்தது. அதன் பேரில், போதைப்பொருள் தடுப்பு ஆய்வாளர் சந்திரா மேரி தலைமையிலான குழுவினர், தருமபுரி டிஎஸ்பி வினோத் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆகியோர் இணைந்து கடந்த சில நாட்களாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், நல்லம்பள்ளி அருகே உள்ள மயில்கொட்டாய் என்ற இடத்தில்   வஜ்ரவேல் என்பவரிடம் இளைஞர்கள் போதைக்கு வலி நிவாரணி ஊசிகளை போட்டுக்கொள்வது தெரியவந்தது.  மேலும், போலீசாரின் விசாரணையில்,  தருமபுரி சாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த  சோமசுந்தரம் என்பவரது  மெடிக்கலில் இருந்து வலி நிவாரணி மருந்துகள் வாங்கப்பட்டது தெரியவந்தது.

arrest

தொடர்ந்து, மெடிக்கல் உரிமையாளர் சோமசுந்தரத்திடம் நடைபெற்ற விசாரணையில் தருமபுரியை சேர்ந்த காமராஜ், முருகேசன் என்பவருடன் இணைந்து, பெங்களூருவில் இருந்து மருந்துகளை வாங்கி வந்து, வஜ்ரவேல் மற்றும் சோமசுந்தரத்துக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, காமராஜ், சோமசுந்தரம், வஜ்ரவேல் மற்றும் முருகேசன் ஆகியோரை தனிப்படை  போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,352 போதை மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ரூ.400 மதிப்பிலான இந்த வலி நிவாரணி மருந்துகள் ரூ.1600-க்கு விற்பனை செய்யப்பட்டது செய்தது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார்,நோயாளிகளுக்கு வலி நிவாரணத்துக்காக வழங்கப்படும் ட்ரெமடால் எனும் மருந்தை, போதைக்கு மாற்றாக இளைஞர்கள் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மதுவை விட குறைவான விலையில் கிடைப்பதா இதனை இளைஞர்கள் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். மேலும், கைதான 4 பேர் மீதும், போதை மருந்து தடுப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.