சர்வதேச தடகள போட்டிகளில் வென்ற காவலர்களுக்கு சேலம் மாவட்ட எஸ்.பி., பாராட்டு

 
slm slm

நெதர்லாந்தில் நடைபெற்ற காவல் துறையினருக்கான தடகள போட்டியில் வெற்றிபெற்ற காவலர்கள், மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நெதர்லாந்து நாட்டில் கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை காவல் துறையினருக்கான சர்வதேச தடகள போட்டிகள் தொடங்கி நடைபெற்றன. இதில் சேலம் மாவட்ட காவல் துறையை சேர்ந்த தலைமை காவலர்கள் சுரேஷ்குமார், தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், தமிழரசி 2 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களும்,  சுரேஷ்குமார் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களும் வென்றார்.

salem Sp

சர்வதேச போட்டியில் வென்ற இருவரும், தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிலையில், நேற்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்-ஐ நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உலகளவில் தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த இருவருக்கும், மாவட்ட எஸ்.பி., ஸ்ரீ அபிநவ் தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.