சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அரசு சார்பில் 3 ஜோடிகளுக்கு திருமணம்!

 
slm

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று 3 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.  

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இன்று 217 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் 3 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர் தலைமை வகித்தார். இதில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொணடு 3 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, புதுமண ஜோடிகளுக்கு தமிழக அரசின் சார்பில் 7 சுப முகூர்த்த பொருட்கள் மற்றும் 19 சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. 

slm

இந்த நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ ராஜேந்திரன், மணமக்களுக்கு தனது திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும், மணமக்களுக்கு பிறக்கு குழந்தைகளுக்கு தமிழின் பெருமைகளை உணர செய்யும் வகையில் அழகான தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சேலம் துணை மேயர் சாரதாதேவி, சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, துணை ஆணையர் ராஜா, சுகவனேஸ்வரர் கோவில் துணை ஆணையர் சரவணன் மற்றும் மணக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.