சேலம் - விருத்தாச்சலம் பயணிகள் ரயில் சேவை நாளை ரத்து!

 
train

பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயில் சேவை நாளை இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சின்ன சேலம் - புக்கிரவாரி ரயில் நிலையங்களுக்கு இடையே நாளை லெவல் கிராசிங் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம் - விருத்தாசலம் ரயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

salem

இதன்படி, விருதாச்சலம் - சேலம் ரயில் (வண்டி எண் 06121) மற்றும் சேலம் - விருதாச்சலம் ரயில் அகியவை நாளை வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், காரைக்கால் - பெங்களுரு பயணிகள் ரயில் (வண்டி எண் 16530) சேலம் ரயில் நிலையத்திற்கு  நாளை 1.30 மணி நேரம் தாமதமாக வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.