பள்ளி விடுதிகள், தங்கும் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும் - தென்காசி ஆட்சியர் ஆகாஷ்!

 
tenkasi

தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி இயங்கி வரும் தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பெண்கள் (ம) குழந்தைகள் தங்கும் விடுதிகள் (Regulation) சட்டம் 2014ன் படி அனைத்து குழந்தைகள் தங்கும் விடுதிகளும் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும். இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் குழந்தைகள் தங்கும் விடுதிகள் இயங்குவது சட்டப்படி குற்றமாகும்.  

tenkasi ttn

எனவே, தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும், பள்ளிகளில் இயங்கி வரும் தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் விடுதிகள், தமிழ்நாடு பெண்கள் (ம) குழந்தைகள் தங்கும் விடுதிகள் (Regulation) சட்டம் 2014ன் படி பதிவு செய்வதற்கு இச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி கருத்துருவினை தயார் செய்து ஓரு மாத காலத்திற்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் (பொ.) மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, எண் - 14, பெருமாள் கோவில் தெரு, தென்காசி - 627811 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.