ஒரு விரல் வடிவில் நின்று வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

 
voters voters

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 450 மாணவ, மாணவிகள் ஒரு விரல் வடிவில் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீ ஞானானந்தா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

voters

இதனையொட்டி, பள்ளி மைதானத்தில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திரண்டு நின்று, தொடர்ச்சியாக 5 நிமிடங்கள் கரஒலி எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து, 450 மாணவ, மாணவிகள் வாக்களிக்களிப்பதை குறிக்கும் விதமாக ஒரு விரல் வடிவில் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.