ஈங்கூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை... பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்!

 
perund

ஈரோடு மாவட்டம் ஈங்கூர் அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை பெருந்துறை எம்எல்ஏ எஸ் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு, அதிமுக எம்எல்ஏ  ஜெயக்குமார் தனது மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை ஏற்படுத்தி வருகிறார். இதுவரை 45 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு  ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை வழங்கப்பட்டு உள்ளது. கிராமப்புற மாணவர்கள், இந்த ஸ்மார்ட் கிளாஸ் மூலம் இணைய வழி கல்வியை முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். 

perun

இதன் தொடர்ந்து, பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட ஈங்கூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை, இன்று பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளரு எஸ் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.கே. கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் எஸ்.கே. செந்தில்குமார் மற்றும்  ஆர்.கே.ஸ்டில்ஸ் நிர்வாக இயக்குனர் பிரமோத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  இதில் சென்னிமலை ஒன்றிய செயலாளர் ராம்ஸ் என்கிற ராமசாமி, பொருளாளர்  கே.பி.எஸ்.மணி, அவைத்தலைவர் விஸ்வநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜமூர்த்தி, துணைத் தலைவர் ராசு உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.