ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.87 லட்சம் வசூல்!

 
srirangam

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.87 லட்சம் ரொக்கம், 153 கிராம் தங்கம் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் கிடைக்கப்பெற்றது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 வைணவ தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் எனவும் அழைக்கப்படும் சிறப்புக்குரியது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, சுவாமியை தரிசித்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.

hundial

அதன்படி, இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர்கள் கந்தசாமி, மாரியப்பன் ஆகியோர் தலைமையில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு காணிக்கைகளை எண்ணினர். முடிவில் இம்மாத உண்டியல் காணிக்கையாக 87 லட்சத்து 3 ஆயிரத்து 958 ரொக்கப் பணம் வசூலானது. மேலும், 153 கிராம் தங்கம், 1 கிலோ 870 கிராம் வெள்ளி ஆகியவையும், டாலர் உள்ளிட்ட 58 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைக்கப்பெற்று உள்ளது.