மதுரை மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை... தென் மண்டல ஐ.ஜி. எச்சரிக்கை!

 
ig asra garg ig asra garg

மதுரை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில், மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் தனிப்படை காவலர்களுக்கான ஆலேசானை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமை வகித்தார். இதில் மதுரை சரக டிஐஜி பொன்னி, மாவட்ட எஸ்பி சிவ பிரசாத், ஏடிஎஸ்பிக்கள, டிஎஸ்பிக்கள் மற்றும் தனிப்படை போலீசார் கலந்து கெண்டனர்.

police

இந்த கூட்டத்தில் பழிக்கு பழியாக கொலை சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் போன்றவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, ஐஜி அஸ்ரா கார்க் அறிவுரை வழங்கினார்.

மேலும், சட்டம் ஒழுங்கு பாதிக்க கூடிய நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.