கோவை தனியார் எலக்ட்ரானிக்ஸ் குடோனில் திடீர் தீ விபத்து!

 
fire

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் எலக்ட்ரானிக்ஸ் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

கோவை அவிநாசி சாலை கடலைக்கார சந்தில் சூரஜ் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரானிக்ஸ் குடோன் செயல்பட்டு வருகிறது. இன்று தீபாவளி பண்டிகையை ஒட்டி அந்த பகுதியில் சிலர் பட்டாசு வெடித்ததாக வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, பட்டாசு தீப்பொறி பட்டதால் குடோனில் திடீரென தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்திற்குள் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியால், குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக கோவை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

fire

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீவிபத்தில் கடையில் இருந்த ஆயிரக்கணக்கான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.