கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்த வனத்துறை!

 
kumbakarai

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்து உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் நீர்பிடிப்பு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதி விளங்குகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடர் மழைபெய்து வருவதால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து  சீராக அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில், நேற்றிரவு நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

rain

இதனை அடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும், நீர்வரத்து சீரான பிறகே அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். 4 நாட்கள் தொடர் விடுமுறையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு ஏராளமானோர் சுற்றுலா வந்த நிலையில், வனத்துறை தடையின் காரணமாக ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.