அரியலூரில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

 
ariyalur

அரியலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, ஆட்சியர் ரமண சரஸ்வதி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.  இந்த கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 275 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

ariyalur

தொடர்ந்த, ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய 6 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் மற்றும் 69 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் ஆட்சியர் பாராட்டு சான்றிதழை வழங்கினார். அப்போது, மற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இப்பணியை விரைந்து முடித்து 100 சதவீத இலக்கை வரும் 31ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆட்சியர் ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டார்.