தருமபுரி மாவட்டத்தில் 6 பேரூராட்சிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி!

 
dharmapuri ttn

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 பேரூராட்சிகளில், 6 பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, கம்பை நல்லூர், காரிமங்கலம், கடத்தூர் ஆகிய 6 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்றுள்ளது. மேலும், பென்னாகரம் பேரூராட்சியிலும் முன்னிலை வகித்து வருகிறது.

கம்பைநல்லூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், 7 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 2 வார்டுகளில் அதிமுகவும், 5 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும் வென்றுள்ளனர். பாலக்கோடு பேருராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 15-ல் திமுக கூட்டணி வென்றுள்ளது. 2 வார்டுகளில் அதிமுகவும், ஒரு வார்டில் சுயேட்சை வேட்பாளளும் வெற்றி பெற்றுள்ளனர்.

voting

இதேபோல், பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 11 வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது. அடுத்தபடியாக, 3 வார்டுகளில் சுயேட்சைகளும், ஒரு வார்டில் காங்கிரசும் வென்றுள்ளது. கடத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 10 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 2 வார்டுகளில் அதிமுகவும், 3 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். 

இதேபோல், காரிமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 11ல் திமுக வெற்றி பெற்றுள்ளது. 3 வார்டுகளில் அதிமுகவும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், பாப்பாரப்பட்டி போரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 11ல் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு இடத்திலும், சுயேட்சிகைள் 2 இடத்திலும் வென்றுள்ளனர்.

dmk

பென்னாகரம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 7 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. 2 வார்டுகளில் அதிமுக வென்ற நிலையில், தேமுதிக ஒரு வார்டிலும், சுயேட்சை வேட்பாளர் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.