திருச்செந்தூர் கோவில் வைகாசி விசாக திருவிழா... பாதுகாப்பு பணியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார்!

 
tuti

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வரும் 11ஆம் தேதி துவங்கி 13ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு ஏடிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள்  உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

tiruchendur

வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரை பகுதிகள் மற்றும் கோவில் வளாக சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குற்றச் செயல்களை தடுப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள்.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி வைகாசி விசாக திருவிழாவுக்கு சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி இல்லை. மீறினால் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.