திருப்பூர் ரயில் நிலைய தகவல் மையத்திற்கு இந்தியில் அறிவிப்பு பாதகை... பொதுமக்கள் எதிர்ப்பால் அகற்றிய அதிகாரிகள்!

 
tirupur

திருப்பூர் ரயில் நிலைய தகவல் மையத்தில் சகயோக் என இந்தியில் ஒப்பட்டப்பட்ட ஸ்டிக்கருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த ஸ்டிக்கரை அதிகாரிகள் அகற்றினர்.    

திருப்பூர் ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் தகவல் மையம் என்றும், தமிழில் சேவை மையம், அதேபோல் இந்தி மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் புதிதாக ஒப்பட்டப்பட்ட பெயர் ஸ்டிக்கரில் இந்தி எழுத்துக்களில் சகயோக் என எழுதப்பட்டிருந்தது. அத்துடன், ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களிலும் சகயோக் என அச்சிடப்பட்டு இருந்தது.

tirupur

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த பொதுமக்கள், இந்தியில் சகயோக் என எழுதப்பட்டால், அதேபோல் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர் என்றும், தமிழில் சேவை மையம் என்றும் எழுதப்பட்டால் தான் அனைத்து மொழியினருக்கும் புரியும் என்றும், ஆனால் அனைத்து மொழியினருக்கும் சகயோக் என இந்தி வார்த்தையை எழுதினால் அதன் அர்த்தம் எப்படி தெரியும் என  சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக திருப்பூர் ரயில் நிலைய சேவை மையம் முன்பு ஒட்டப்பட்டிருந்த சகயோக் இந்தி பெயர் பதாகையை அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.