கோவையில் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

 
cbe muslim cbe muslim

கோவையில் என்ஐஏ சோதனையை கண்டித்து இன்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கூட்டமைப்பு சார்பில் நடைபெற இருந்த கண்ட ஆர்ப்பாட்டம் வரும் புதன் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.  

கடந்த 22ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது தமிழகத்தில் 10 பேர் உள்பட நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

cbe muslim

இந்த நிலையில், என்ஐஏ சோதனையை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அனைத்து இஸ்லாமிய இயக்கம், ஜமாத் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் கோவையில் தற்போது நடைபெற்று வரும் சட்ட விரோத செயல்கள் மற்றும் அசாதரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நேற்று இஸ்லாமிய இயக்கம், ஜமாத் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்புகளின் அவரச ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை வரும் 28ஆம் தேதி புதன் கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.