விழுப்புரத்தில் அரசுப்பேருந்து மீது லாரி மோதல் - ஒட்டுநர் பலி, 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
accident

விழுப்புரத்தில் அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை துறையூரை சேர்ந்த குணசேகரன் என்பவர் ஓட்டிச் சென்றார். புதன்கிழமை அதிகாலை விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரம் பகுதியில் திருச்சி - சென்னை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது.

accident

அப்போது, திருச்சியில் இருந்து சென்னைக்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து ஒன்று திடீரென சாலையை கடக்க முயன்றது. அப்போது, எதிர்பாராத விதமாக அரசுப்பேருந்து மீது லாரி மீது அதிவேகமாக மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநர் குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் வந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் பலியான லாரி ஓட்டுநர் குணசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து தாலுகா தாலுகா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, பேருந்து மீது லாரி மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.