புதுக்கோட்டையில் தக்காளி வியாபாரி வீட்டில் நகை திருடிய இருவர் கைது; 47 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் பணம் பறிமுதல்!

 
dd

புதுக்கோட்டையில் தக்காளி வியாபாரி வீட்டில் நகைகளை திருடிய வழக்கில் ஆட்டோ ஓட்நர் உள்ளிட்ட 2 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 47 பவுன் நகை மற்றும் 35 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். 

புதுக்கோட்டை போஸ் நகர் 3-வது வீதியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி. இவர் தக்காளி மொத்த வியாராம் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி ராஜலட்சுமி அறந்தாங்கி சந்தைக்கு வியாபாரத்துக்காக சென்றிருந்தார். அப்போது, மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து ராஜலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

gold jewels

இதனிடையே கொள்ளை நடைபெற்ற போது, அந்த பகுதியில் நீண்ட நேரமாக ஆட்டோ ஒன்று நின்றிருந்தது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த சசி(36) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சசி மற்றும் அவரது நண்பர் அடப்பன்வயல் பகுதியை அஸ்ரப் அலி (33) ஆகியோர் இணைந்து நகைகளை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் சசி, அஸ்ரப் அலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தைலமரக் காட்டில் பதுக்கி வைத்திருந்த 47 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர். கொள்ளை நடைபெற்ற 5 நாட்களில் குற்றவாளிகளை கைது செய்த கணேஷ் நகர் போலீசாருக்கு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே பாராட்டு தெரிவித்தார்.