மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை!

 
suicide

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள பருத்திமூட்டுவிளையை சேர்ந்தவர்கள் மிக்கேல்தாசன் - மேரி சரோஜினி தம்பதியினர். இவர்களது மகன் பெமிஷ் (29). இவர் கட்டிட தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார்.மதுப் பழக்கத்துக்கு அடிமையான பெமிஷ், நாள்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடு செய்து வந்த நிலையில், மது அருந்தியாதால் ஆத்திரமடைந்து பெமிஷை கண்டித்து உள்ளனர். இதனால் பெமிஷுக்கும், அவரது தாயார் மேரி சரோஜினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

kumari
கடந்த சனிக்கிழமை இரவு ஈஸ்டர் பிரார்த்தனைக்காக மேரி சரோஜினி, அருகில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பெமிஷ் தூக்கிட்டு தற்கெலை செய்து கொண்டார்.  இரவு பிரார்த்தனை முடிந்து வீட்டிற்கு வந்த மேரி சரோஜினி, பெமிஷ் அறையை தட்டியுள்ளார். அவர்   கதவை திறக்காததால் சந்தேகமடைந்த மேரி சரோஜினி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சென்று பார்த்துள்ளார். அப்போது, பெமிஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இதனை கண்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த தக்கலை போலீசார், பெமிஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்தியதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.